கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 15ந் தேதி கடைசிநாள்

கிருஷ்ணகிரி, அக். 7–
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள நிதி எழுத்தறிவு நிபுணர் பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15ந் தேதி-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தினேஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்றிய அரசின் திட்டங்கள் திறன்பட செயல்படுத்தப்படுவதையும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பயன்பாட்டு சான்று அடிப்படையில் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தவும், பயனாளிகள் மற்றும் திட்டப்பலன்கள் கண்காணிக்கவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட மகளிர் அதிகார மையம் நவம்பர் 2023 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிதி எழுத்தறிவு நிபுணர் தேர்வு செய்யப்பட உள்ளார். இப்பணியிடத்திற்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிதி எழுத்தறிவு நிபுணர்- (பதவி-1)
பொருளாதாரம், வங்கியியல், இதர ஒத்த துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் நிதி சார்ந்த பணிகளில் மூன்று வருட முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியம் ரூ.21,000 ஆகும்.
இப்பதவிக்கு உரிய சான்றிதழ்களுடன், அறை எண் 21 மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் அக்டோபர் 15 மாலை 5 மணிக்குள் நேரடியாக விண்ணப்பம் செய்திட வேண்டும் என கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?