கோவை அவினாசி மேம்பாலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 9ந் தேதி திறந்து வைக்கிறார்

கோவை அவினாசி மேம்பாலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 9ந் தேதி திறந்து வைக்கிறார்
கொடிசியாவில் உலக புத்தொழில் இயக்க மாநாட்டில் பங்கேற்று, குறிச்சி சிட்கோவில் தங்கநகை பூங்கா பணிகளுக்கும் அடிக்கல்
கோவை, அக். 7–
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9ந் தேதி கொடிசியாவில் உலக புத்தொழில் இயக்க மாநாட்டினை தொடங்கி வைத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் அவினாசி சாலையில் உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1791.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட சாலையினை திறந்து வைக்க உள்ளார். மேலும் உயிர் அமைப்பு சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் “உறுதி மொழி” எடுத்துகொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126.12 கோடி மதிப்பீட்டில் தங்க நகை பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்கள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் 9ம் தேதி காலை 9.45 மணியளவில் கோவை மாவட்டம், கொடிசியாவில் நடைபெறும் உலக புத்தொழில் இயக்க மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார்கள். தொடர்ந்து, காலை 11 மணியளவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவினாசி சாலையில் உப்பிலிப் பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ நீளத்திற்கு ரூ.1791.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட சாலையினை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்கள்.
மேலும், கோவை அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)-யில் காலை 11.30 மணியளவில் முதலமைச்சர் தலைமையில், உயிர் அமைப்பு சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் “உறுதி மொழி” ஏற்றல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து, காலை 12 மணியளவில் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126.12 கோடி மதிப்பீட்டில் தங்க நகை பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்கள்.
இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், குறு, சிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அரசு கூடுதல் செயலாளர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?