வடகிழக்கு பருவமழை: நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அலுவலர்களுடன் கலெக்டர் லட்சுமி பவ்யா ஆலோசனை
நீலகிரி, அக். 7–
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கி ணைப்பு கூட்டம் கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசுகையில் கலெக்டர் தெரிவித்ததாவது:
மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளை கண்காணிக்க மாவட்டத்தில் 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட நிலை அலுவலர்களைக் கொண்ட 6 குழுக்கள், 6 வட்டங்களுக்கும் கண் காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவசர காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக வரு வாய், உள்ளாட்சி, காவல், தீயணைப்பு, நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுப்பணி, மருத்துவம் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் 3,500 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 200 தன்னார்வலர்கள் (Aaptamitra Volunteers) தயாராக உள்ளனர்.
தொலைபேசி எண்கள் வெளியீடு
மழை அல்லது இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. கட்டண மில்லா தொலைபேசி 1077, நிலையெண்கள் 0423-2–450034, 2450035, வாட்சப் எண் 94887 00588. மேலும், ஒவ்வொரு வட்டத்திற்கும் தனித்தனியாக கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, உதகை 0423-–2445577, குன்னூர் 0423-–2206002, கூடலூர் 04262–-261295, உதகை 0423-–2442433, குன்னூர் 0423-–2206102, கோத்தகிரி 04266-–271718, குந்தா 0423-–2508123, கூடலூர் 04262–-261252, பந்தலூர் 04262-–220734.
பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட நிர்வாகம் முழுமையாக தயாராக உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கௌர், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வன அலுவலர்கள் (நீலகிரி கோட்டம்) கௌதம், வெங்கடேஷ் பிரபு (கூடலூர்), குன்னூர் சாரா ஆட்சியர் சங்கீதா, துணை இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) வித்யாசாகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லோகநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.