கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்: ஸ்டாலின் அறிவிப்பு

கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்: ஸ்டாலின் அறிவிப்பு

கோவை, அக். 7–


கோவை அவிநாசி சாலையில் ரூ.1,791 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10.1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலத்துக்கு விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–


2020ல் அறிவிக்கப்பட்டு, 2021ம் ஆண்டு மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை மேம்பாலத்தை தி.மு.க. அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.


கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த ‘அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.


கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், ஜி.டி.நாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்.


இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%