கீழ்கொடுங்காலூர் பள்ளி நாட்டு நலப் பணி திட்ட முகாமில் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு..

கீழ்கொடுங்காலூர் பள்ளி நாட்டு நலப் பணி திட்ட முகாமில் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு..


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப் பணி திட்ட முகாமில் நேற்று போதைப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சாலைப் பாதுகாப்பு முறைமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை பற்றி வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.தேவதாஸ் தலைமை தாங்கினார். ஓம் சக்தி பள்ளி தாளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் பூங்காவனம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். மேலும் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் சம்பத், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஒருங்கிணைப்பாளர் ம. சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%