குடவாசல் அருகே ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பொது விநியோக கட்டிடங்களை நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்.

குடவாசல் அருகே ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பொது விநியோக கட்டிடங்களை நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்.



திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னியூர்,மணியாங்குடி, செம்மங்குடி, சருக்கை, வடகட்டளை உள்ளிட்ட பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அன்னியூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட செம்மங்குடி வருவாய் கிராம பகுதியில் ரூ. 13.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்து அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் அதனைத் தொடர்ந்து அதம்பார் ஊராட்சி பகுதியில் உள்ள ஸோத்திரியம் பகுதியில் ஸோத்திரியம் மற்றும் குப்பம் பகுதி மக்கள் பயன்படும் வகையில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர பொது விநியோக கட்டிடத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசும் போது அதிமுக ஆட்சியில் தான் ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%