குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து: இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

புதுடெல்லி, ஜூலை 17–
அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் ஒருவர் திருட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா திரும்பப் பெறப்படும் என அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள டார்க்கெட் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் இந்திய பெண் ஒருவர் சுமார் 7 மணிநேரம் பொருட்களை வாங்குவது போல நடித்துள்ளார். பிறகு, சுமார் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிக்கொண்டு, அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளார்.
இதை கண்டறிந்த ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் எடுத்து வந்த பொருட்களுக்கு பணம் செலுத்த அந்தப் பெண் தயாராக இருந்த போதும், போலீசாருக்கு அவருக்கு கைவிலங்கிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..இந்த நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தாக்குதல், திருட்டு, ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்து பொருட்களைத் திருடுதல் போன்ற செயல்களில் நீங்கள் அமெரிக்காவில் ஈடுபட்டால், அது சட்ட சிக்கல்களை உருவாக்கும். அது உங்கள் விசா நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, அதன்பின்னர் நீங்கள் அமெரிக்காவுக்குள் என்றைக்குமே நுழையாதபடி செய்யும். சட்டம், ஒழுங்கை அமெரிக்கா மதிக்கிறது. அமெரிக்க சட்டதிட்டங்களை இங்குவரும் வெளிநாட்டவரும் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கிறது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகக் கணக்குகளைக் கண்காணிக்கவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க விசா கோரி விண்ணப்பித்த இந்தியர்களுடனான நேர்காணலை ரத்து செய்த தூதரகம் அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?