குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
Sep 29 2025
30

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தென்காசி
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர்ச்சியான மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வருகை புரிந்தனர். மேலும் இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் வார இறுதி விடுமுறை என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு வரை குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து, லேசான வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து பெய்த மழையின் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?