ராமேசுவரத்தில் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி தீவிரம்

ராமேசுவரத்தில் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி தீவிரம்



இந்தியாவில் 4 இடங்களில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது.

ராமேசுவரம்,


அகில இந்திய அளவில் முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் விளங்கி வருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் தரிசித்து செல்கின்றனர். ராமேசுவரம் தலத்துடன் ஆஞ்சநேயருக்கு முக்கிய புராண தொடர்பு உள்ளது.


எனவே ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் வடமாநிலத்தில் உள்ள ஒரு அமைப்பு சார்பில் ரூ.100 கோடியில், 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இதற்காக உயரமான பீடம் அமைக்கப்பட்டு அதில் ஆஞ்சநேயரின் கம்பீரமான உருவ சிலை கட்டப்பட்டு வருகிறது. பாதத்தில் இருந்து கழுத்து வரையிலான சிலைப்பணிகள் முடிந்துள்ளன. மீதம் உள்ள பணிகளை இன்னும் 4 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


இதுகுறித்து சிலை கட்டுமான என்ஜினீயர் ஸ்ரீதர் கூறும்போது, “வடமாநிலத்தை சேர்ந்த அறக்கட்டளை மூலம் இந்தியாவில் 4 இடங்களில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் சிம்லா ஆகிய 2 இடங்களில் ஆஞ்சநேயர் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுவிட்டன. தற்போது ராமேசுவரத்தில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இனி அசாமிலும் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட உள்ளது” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%