முற்றத்தில் சொர்க்கமே
மூங்கிலின் வர்க்கமே...
கண்ணனின் கைகளில்
கண்போல் தவழுகிறாய்
ஆவினங்கள் விரும்பும்
கானங்களாவாய்
தாளத்துடன்
தேனாகி சுரக்கிறாய்
ஏங்கும் செவிகளுக்கு
இன்பம் சேர்க்கிறாய்
நெஞ்சின் முத்துக்களை
மாலையாய்க்கோர்க்கிறாய்
மழலையாய்த்தவழ்ந்து
மனங்களை மயக்குவாய்
தணியாத தாகத்திற்கு
இளநீர் இசையாவாய்
துளைகளால்
காற்றை விழுங்குவாய்
இதயம் ஈரமாக
இதமாய் வருடுவாய்
இருவண்ணமனங்களை
கொள்ளை கொள்வாய்
மேகமின்றிவானத்திற்கு
அழைத்துச் செல்வாய்

கலியுகன்கோபி
சென்னை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%