வாக்குரிமை

வாக்குரிமை


வாக்குரிமையை இழக்காதே..நண்பா

வாக்குரிமையை இழக்காதே!

           (வாக்கு)

வாக்கைப் பயன்படுத்த

வேண்டும்...நம்

வாக்கைப் பயன்படுத்த

வேண்டும்!

நல்லாட்சி நடைபெறவே..என்றும்

சொல்லாட்சி நடைபெறவே...

             (வாக்கு)


சொன்னதைச் செய்வோரை..என்றும்

செய்வதைச் சொல்வோரைக்

கண்டு வாக்களிப்போம்..மற.னங்

கொண்டு வாக்களிப்போம்!

          (வாக்கு)


நல்லாரைத் தேர்ந்தெடுக்கப்

பொல்லாரைப் பேர்த்தெடுக்க

கல்லா ரானாலும் நமக்குச்

சொல்வதைச் செய்துமுடிக்க...

           (வாக்கு)


உரிமையைத் துறக்காதே..நண்பா

உரிமையைத் துறக்காதே

உரிமையைப் பயன்படுத்த வேண்டும்..நம்

உரிமையைப் பயன்படுத்த வேண்டும்...

              (வாக்கு)


வாக்களித்தல் நாம்

கடமையன்றோ..நண்பா

வாக்களித்தல் நம்

கடமையன்றோ!

நோக்கத்தை நிறைவேற்று..நண்பா

நோக்கத்தை நிறைவேற்று..

                 (வாக்கு)


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%