கூடலூரில் ரூ.9.44 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள்: விரைந்து முடிக்க கலெக்டர் லட்சுமிபவ்யா உத்தரவு

கூடலூரில் ரூ.9.44 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள்: விரைந்து முடிக்க கலெக்டர் லட்சுமிபவ்யா உத்தரவு



நீலகிரி, ஜன. 


நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை மற்றும் சேரங்கோடு ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.9.44 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை ஊராட்சியில் ரூ.39.87 லட்சம் மதிப்பில் மேபீல்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், ரூ.50 லட்சம் மதிப்பில் விளாங்கூர் துணை சுகாதார நிலையம் கட்டும் பணியை பார்வையிட்டு, கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்தி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

2024–25ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ், குழிமூலாவில் தலா ரூ.5.73 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஐந்து வீடுகளின் பணிகளை ஆய்வு செய்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதே பகுதியில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பயனாளி கமலத்தின் வீடும் பார்வையிடப்பட்டது. மேலும், ரூ.7 லட்சம் மதிப்பில் விளாங்கூர் முதல் குழிமூலா வரை 790 மீட்டர் நீள அகழி அமைக்கும் பணி மற்றும் ரூ.20.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கொட்டாடு அங்கன்வாடி மையக் கட்டடப் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.

 தொடர்ந்து, பழங்குடியினர் நலத் திட்டங்களின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் பந்தகாப்பு பழங்குடியினர் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தை இந்த மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.90 லட்சம் மதிப்பில் பந்தகாப்பு பகுதியில் கட்டப்பட்டு வரும் எட்டு வீடுகள், பழங்குடியினர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் ஓடோடேம் வயல் பகுதியில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கட்டடம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடு ஆகிய பணிகளும் பார்வையிடப்பட்டன. ஓடோடேம் வயல் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, நடமாடும் நியாய விலை வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%