கூட்டம்

கூட்டம்

சித்திரையில் சிரிக்கும் கத்தரி அனலோடு, பெளர்ணமி நிலவின் ஒளிவீசும் கூட்டம் 


வைகாசியில் வணங்கும்

தமிழ் கடவுளின்

விசாகப் பெருவிழா கூட்டம்


ஆனியில் நீளும் 

பகல் பொழுதோடு

முதுவேனிற் காலத்தின் கூட்டம்


ஆடி பதினெட்டில்

அழகாகப் பெருக்கெடுத்து  

ஓடும் நதிகளின் கூட்டம்


ஆவணித் திங்களில்

அவதரித்த மாதவனை 

துதிக்கும் பக்தர்கள் கூட்டம்


புரட்டாசியில் வீடு 

தோறும் நவராத்திரி

கொலு பொம்மைகள் கூட்டம்


ஐப்பசி அடைமழையில் 

பொங்கிப் பெருகி

பாயும் வெள்ளத்தின் கூட்டம்


கார்த்திகையில் கருமை இருளைப் போக்கிட

உதவும் தீபங்களின் கூட்டம்


மார்கழி குளிரில் 

பனியில் நனைந்து 

மலரும் ரோஜாக் கூட்டம்


தைப் பிறந்தால்

வழி பிறக்குமென 

காத்திருக்கும் மனிதக் கூட்டம்


மாசி, பங்குனியில்

உச்சம் தொடும்

சூரிய கதிர்களின் கூட்டம்


எங்கும் எதிலும் கூட்டம்...


மனிதனின் சிறப்பே

வாழ்வைக் கூடி வாழ்வதே...


இயற்கை போதிப்பதும் அதுவே.


நா.பத்மாவதி

கொரட்டூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%