கேரள கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் மலர் கம்பளம்: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு

கேரள கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் மலர் கம்பளம்: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்​தில் உள்ள பார்த்​த​சா​ரதி கோயி​லின் பிர​காரத்​தில் ஆஎஸ்​எஸ் கொடி​யுடன் ஆபரே ஷன் சிந்​தூர் பெயரில் மலர் கம்​பளம் உரு​வாக்​கிய அக்​கட்​சி​ தொண்​டர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.


இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், “இந்த பகு​தி​யில் கம்​யூனிஸ்ட் (சிபிஐஎம்) கட்​சி​யினருக்​கும், பாஜக​வினருக்​கும் இடையே ஏற்​கெனவே பல்​வேறு மோதல்​கள் ஏற்​பட்​டுள்​ளன. எனவே, அவர்​களிடம் இந்த பதற்​றம் நிறைந்த பகு​தி​யில் கொடியோ அல்​லது வேறு ஏதும் அடை​யாளத்தை பிர​திபலிக்​கும் வகை​யில் மலர் அலங்​கரிப்​பு​களோ வைக்​கக்​கூ​டாது என்று ஏற்​கெனவே அவர்​களிடம் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. அதனை மீறி பாஜக​வினர் இந்த மலர் கம்​பளத்தை உரு​வாக்​கி​யுள்​ளனர்.


இதன் காரண​மாக, இருதரப்​பினரிடையே கலவரத்தை தூண்​டும் வகை​யில் செயல்​பட்​ட​தாக கூறி ஆர்​எஸ்​எஸ் தொண்​டர்​களு​டன் சேர்த்து மேலும் 25 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது’’ என்​றனர்.


எப்​ஐஆரை திரும்​பப் பெறுக: ஆர்​எஸ்​எஸ் தொண்​டர்​கள் மீது போடப்​பட்ட எப்​ஐஆரை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் என கேரள மாநில பாஜக தலை​வர் ராஜீவ் சந்​திரசேகர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%