
ராஞ்சி:
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பெரிய கன்டெய்னர் லாரிகளில் பசுக்கள் ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டம் நவடா கிராமத்துக்கு கடத்திச் செல்வதாக விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் கடந்த 4-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே, பசுக்களை நவடா கிராமத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு விரைந்து சென்ற விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் பசுக்களை மடக்கி உள்ளனர்.
அங்கு தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மற்றொருவர் தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுமார் 200 பசுக்களை காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றனர்.2 நாட்களுக்கு பிறகு பலமு நகரில் உள்ள மையத்துக்கு பசுக்களை ஓட்டிச் சென்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?