தமிழ்நாடு முதல்வர் கோப்பை 2025 மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி மதுரை மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு
Sep 09 2025
19

மதுரை, செப்.6-
தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மதுரை மண்டல அளவிலான (மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி) பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கான பளு தூக்கும் போட்டி மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, ஸ்டார் அகாடமி தமிழ்நாடு விளையாட்டு மெம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி யாளர் மார்க்ஸ் லெனின் ஏற்பாடுகளை செய்தனர். பள்ளிகளுக்கான போட்டி முடிவுகள்: 60 கிலோ பிரிவில் சபரி 4ஆம் இடம், 65 கிலோ பிரிவில் அஜய் கிருஷ்ணன் 2ஆம் இடம், அகமது அப்துல் அஜிஸ் 3ஆம் இடம் பெற்றனர். 71 கிலோ பிரிவில் சஞ்சய் முதலிடம், 79 கிலோ பிரிவில் தீபக்ராஜ் முதலிடம், மதன் 2ஆம் இடம், தினேஷ் ராஜா போஸ் 3ஆம் இடம், கிரண்ராஜ் 4ஆம் இடம் பெற்றனர். மாணவி களுக்கான 44 கிலோ பிரிவில் அனந்த லட்சுமி 2ஆம் இடம், சௌபர்ணிகா 3ஆம் இடம், 69 கிலோ பிரிவில் ஹரிதா 2ஆம் இடம்பெற்றனர். கல்லுாரிப் போட்டி முடிவுகள்: 60 கிலோ எடை பிரிவில் யோகராஜ் 2ஆம் இடம், மாணவிகளுக்கான 53 கிலோ பிரிவில் லோகிதா 2ஆம் இடம், 63 கிலோ பிரிவில் செல்வ ஜெயஸ்ரீ முதலிடம், 69 கிலோ பிரிவில் காவ்யா முதலிடம், 77 கிலோ பிரிவில் திரேஷா 2ஆம் இடம் 71 கிலோ பிரிவில் கோடீஸ்வரன் 3ஆம் இடம், 98 கிலோ பிரிவில் சிவப்பிரகாஷ் 3ஆம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரும் மாநிலப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?