கேவரோடை ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாணம்

கேவரோடை ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாணம்



சீர்காழி, அக் , 05 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள கேவரோடை கிராமத்தில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஶ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். முக்கிய நிகழ்வாக ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பஞ்சராத்திர ஆகம முறைப்படி வெகு விமர்சையாக திருக்கல்யாணம் நடைபெற்றது.

காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. கேவரோடை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாட்டை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் 23-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொடி ஏற்றத்துடன் தொடங்கிய விழா 10 நாட்கள் சிறப்பாக நிறைவு பெற்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%