கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி



பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான "கொங்கு பாலிடெக்னிக் டிராபிக்" விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் இ.ஆர்.கே.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.


மாணவரிடையே அவர் உரையாற்றும் பொழுது, விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாணவர்கள் நம் தேசத்திற்கு பெருமை தேடித் தரும் வகையில் விளையாட வேண்டும் என அறிவுரை கூறினார். முன்னதாக கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மேஜர் பி.எஸ்.ராகவேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.


விழாவில் மாநில அளவில் இருந்து 80 அணிகள் தலைமையின் கீழ் 1100 மாணவர்கள் கலந்து கொண்டனர். இரு நாட்கள் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பூப்பந்து விளையாட்டில் பெருந்துறை காருண்யா பள்ளி மாணவி எஸ்.மோனிஷா, கபடி போட்டியில் கன்னியாகுமரி கல்லாகுளம் பள்ளி மாணவர் டிண்டோ குட்டி லீலா ராம், கைப்பந்து போட்டியில் விருதுநகர் ஜி.எஸ்.ஹிந்து, பள்ளி மாணவர் எஸ்.செல்லப்பாண்டி, வாலிபால் ஆண்கள் பிரிவு போட்டியில் கோவை சபர்பன் பள்ளி மாணவர் டி.மகரந்தன் மற்றும் வாலிபால் பெண்கள் பிரிவு போட்டியில் ஆத்தூர் பாரதி பள்ளி மாணவி ஏ.ரோசினி ஆகியோர் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அனைத்து போட்டிகளிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு சுழற் கேடயமும்,


ரொக்க பணமும் வழங்கப்பட்டது.


பரிசளிப்பு விழாவில் கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியர் கண்ணன், கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் ராஜமாணிக்கம், கொங்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழாவில் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி துறைத் தலைவர்கள், ஆசிரியர் பெருமக்கள், ஆசிரியர் அல்லா பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குனர் பூபதி மணிகண்டன் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குனர் தினேஷ்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%