கொடைக்கானல் தனியார் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை
கொடைக்கானல் தனியார் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை; பழைய உணவு பொருட்களை அழித்து, அபராதம்
கொடைக்கானல், நவ.9–
கேரள சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால், கொடைக்கானல் தனியார் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை செய்து பழைய உணவு பொருட்களை அழித்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க கேரள மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கேரளா மாநில சுற்றுலாப்பயணிகள் தங்கி உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் அனைத்து உணவுகளையும் சோதனை செய்தனர்.
2 உணவகங்களுக்கு அபராதம்
குறிப்பாக நிறம் ஏற்றப்பட்ட மாமிசத்தை உபயோகிக்க கூடாது என்றும், காலை வேளையில் தயாரிக்கப்பட்ட உணவை உபயோகிக்க கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கி, சுகாதாரம் இல்லாமல் இருந்த உணவுகள் கண்டறியப்பட்டு குப்பையில் உணவுகள் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் லாஸ்காட் சாலை மற்றும் 7 ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள இந்த இரண்டு உணவகங்களிலும், சமையல் கூடம் சுத்தமாக இல்லை என கூறி 3000 ரூபாய் வீதம் இந்த இரண்டு உணவகங்களிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் காலாவதியான உணவுகளை பயன்படுத்த கூடாது. சமையல் கூடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?