ஏன் படைத்தாய் இறைவா..

ஏன் படைத்தாய் இறைவா..


காலையில் கண்விழிச்சா காணுந்தெய்வம் அம்மா மாலையில் மயங்கிவரும் மிருகந்தான் அப்பா' ஆக்கிக் கழுவி அடுக்கி வச்சி அவசரமா ஓடிடுவா சித்தாளு வேலைக்கு


பேருந்தில் ஏறினா பெரியவங்க இடிப்பாங்க ஒசிடிக்கட்டுணு ஓட்டுநரு நக்கல் அடிப்பாரு பரதேசியா திரியிரவளே பள்ளிக்கு ஏன்வர்ற பள்ளியில பலபேரு பார்வையிலே கேட்பாங்க


நிறமில்லாச் சோறும் காயில்லாக் குழம்பும் கஷ்டப்பட்டு சாப்பிட்டாக் கண்ணீரு நிரம்பிடும் பள்ளிவிட்டு மூச்சிரைக்க ஓடிவந்து வண்டியேறி வாசல்வந்தா வழி யெல்லாம் கூட்டம்


அப்பா அழராரு அடிச்சு அடிச்சு அம்மா படுத்திருக்கா அழகான மாலைபோட்டு மயக்கமா விழுந்தாளாம் மறுகணம் மூச்சில்லையாம் ஏங்கியேங்கி அழுதேன் நிறுத்தாம அழவிட மாட்டா ஆசையா ஊட்டுவா


அதிகமாப் படிக்கணும் ஆபீசு போகணும்னா அரைகுறையாப் போயிட்டா ஆளானா என்ன செய்வோம்? எங்களை ஏன் படைத்தாய் இறைவா!



எஸ். சந்திரசேகரன் அமுதா செஞ்சிக்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%