கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் வாக்குறுதி போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்தது
Oct 20 2025
10

சென்னை, அக். 18 - 62 நாட்களாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வந்த அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து, தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். அரசுப் போக்குவரத்துக் கழகங் களில் 1.4.2003-க்கு பின்பு பணிக்கு சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாத ஓய்வுக்கால பலன் களை வழங்க வேண்டும், ஒப்பந்த நிலு வைத் தொகையை வழங்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் செலுத்தப்பட வேண்டும்; ஓய்வூதியர் களின் அகவிலைப்படி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனமும், ஓய்வுபெற்றோர் நல அமைப்பும் இணைந்து ஆகஸ்ட் 18 முதல் தமிழகத்தில் 22 மையங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தன. ஒவ்வொரு மையத்திலும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று போராடி வந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?