
சென்னையில் அ. சவுந்தரராசன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்கு வது முழுமையாக அமல்படுத்தப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட 8 அரசாணை களை, அரசு நீக்காமல் உள்ளது. இருப்பினும், தற்போது அமைச்சர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம்” என்றார். “அரசு இயலாமையை கூறுகிறபோது, மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சி யோடு தொழிற்சங்கங்கள் கால அவகாசம் தரு கிறோம். இந்த போராட்டத்திற்கு இதர சங்கங்கள் வராதது வருத்தமளிக்கிறது. அரசியல் நிர்ப்பந்தம், ஆதாயம் காரணமாக கூட வராமல் இருந்திருக்கலாம். ஆனால், மனப்பூர்வமாக ஆதரவு தெரிவித்தார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரு வதற்கு குரல் கொடுத்த சிபிஎம் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நிதியுதவி செய்த தோழமை தொழிற்சங்கங்கள், வாலிபர், மாதர், மாணவர் அமைப்புகள் அனைவருக்கும் நன்றி” என்றும் அ. சவுந்தரராசன் கூறினார். “போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாக்க வும், பணியில் உள்ள, ஓய்வுபெற்ற ஊழியர்களின் நலன்களைப் காக்கவும் சிஐடியுவும், ஓய்வுபெற் றோர் நல அமைப்பும் (ரேவா) ஒன்றிணைந்து செயல்படும். எதிர்காலத்தில் பிற சங்கங்களையும் இணைத்துக் கொண்டு அனைத்துப் பிரச்சனை களுக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம்” என்றும் சவுந்தரராசன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தை நிறைவு செய்து அ. சவுந்தரராசன் உரையாற்றினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?