கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ உப்பிலியப்பன் அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!
Sep 30 2025
27

விழுப்புரம், செப். 31-
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் வட்டம், கோலியனூர் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ உப்பிலியப்பன் அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நீளா நாயகி, பூமி நாயகி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோலியனூர் பெருமாள் கோவில் தெருவில் மேற்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் . இந்த கோயில் ஸ்ரீ நரசிம்ம பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு தினந்தோறும் ஒரு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ உப்பிலியப்பன் அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு புரட்டாசிக்கான சிறப்பு பூஜைகள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதை தொடர்ந்து பிற்பகல் சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு சிறப்பு சொற்பொழிவு டாக்டர் அரவிந்தன் ஸ்ரீ வரதராஜ பெருமாளின் கதைகளை விரிவாக பக்தர்களுக்கு விளக்கி கூறினார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால் அர்ச்சகர் வெகு விமரிசையாக செய்திருந்தார். இந்த கோயிலில் ஒன்பது சனிக்கிழமைகள் தோறும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?