வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 30.09.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 30.09.25


 வணக்கம். 30. 9. 25 அன்று தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் கட்சிகளின் பிரசாதம் பொதுக்கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வருக்கப்படும் என்று ஒரு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொன்னது மிக அருமையான தகவல். இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மிக்க நன்றி.


இன்றைய திருக்குறளை அதன் பொருளுடன் படித்து மகிழ்ந்தேன் மிக அருமையான குரல் பொருள் மன நிறைவுடன் படிக்க முடிந்தது. உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடத்தியது மிகவும் அருமை பாராட்டுக்கள்.


நலம் தரும் மருத்துவம் பகுதியில் வீட்டு வைத்திய குறிப்புகள் என்று மிக அழகாக தெளிவாக ஒன்று இரண்டு என்று பட்டியலிட்டு சொன்னது என் பாட்டி என்னிடம் பேசுவது போல மன நிறைவாக இருந்தது பாராட்டுக்கள்.


கரூரில் நடந்த கோர சம்பவம் பற்றிய இதில் யாரும் சதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தனிமை அவர்களின் பேச்சை படித்தவுடன் ஆச்சரியமாக இருந்தது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கான் அப்துல்லா கபர்கான் வரலாறு அவரைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் அருமை. படிக்காத தகவலாக இருந்தால் ஆவலுடன் படிக்க முடித்து .


பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த கொசு வாழ்க்கை வரலாறு படிப்பதற்கு புதுமையான செய்தியாக இருந்தது. மீம்ஸ் மிகவும் அருமை ரசித்து ருசித்து சிரிக்க வைத்தது .


சமையலறை ஸ்பெஷல் மிகவும் அருமை மீந்துவிட்ட உணவு என்ன செய்யலாம் என்று பொருட்களை வீணடிக்காமல் இருக்க நல்ல டிப்ஸ் கொடுப்பது பாராட்டுக்குரியது.


கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இரண்டு வீடுகள் சேதம் அடைந்த செய்தியும் படமும் கண்களில் கண்ணீரை வர வைத்தது. அந்த பக்கத்தில் வந்த அத்தனை ஆன்மிக படங்களும் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.


சுற்றுலா பக்கத்தில் வந்த மேற்கு தொடர்ச்சி மலையின் விசித்திரமான சுற்றுலா தலங்கள் என்று மிக அருமையான புதுமையான தகவல்கள் சொன்னது அனைவருக்கும் பயனுள்ளது. பாராட்டுக்கள். வானிலை முன்னறிவிப்பு தமிழகத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நல்ல மழைக்கு வாய்ப்பு என்ற செய்தி மழை பெய்யும் என்று தகவலை மிக அழகாக சொன்னது.


கரூர் சம்பவத்தில் நீதிமன்றத்தை நாடிய த.வெ க தலைவர் நடிகர் விஜய் மீது விசிக கடும் விமர்சனம் செய்தது அதிர்ச்சியான தகவலாக இருந்தது . கிரைம் கார்னர் நல்ல விழிப்புணர்வு செய்தியை சொன்னது பாராட்டுக்கள்.


திருமலை திருப்பதி கோவில் பிரம்மோற்சவம் ஆறாவது நாளாக அனுமந்த வாகனம் தங்க கிரகத்தில் மலையப்பசாமி வீதியுலா வந்த செய்தியும் படமும் என்னை திருப்பதிக்கே அழைத்து சென்று விட்டது. விளையாட்டு தகவல்கள் மிகவும் அருமை பாராட்டுக்கள்.


வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் அறிவித்தது அதிர்ச்சியான தகவல். கடைசி பக்கமாக இருந்தாலும் அயல்நாட்டு செய்திகளை மிக அழகாகவும் தெளிவாகவும் கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


புதுமையான செய்திகளை புதுமையான விதத்தில் படங்களுடன் மிக அருமையாகவும் தெளிவாகவும் ஒவ்வொரு விடியலிலும் அழகாக சமர்ப்பிக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%