வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 30.09.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 30.09.25



தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த சரஸ்வதி பூஜை தின நல்வாழ்த்துக்கள்!


நண்பர் ஒருவருக்கு ஆர்வமுடன் அலைபேசியில் இது மாதிரி சரஸ்வதி பூஜை வாழ்த்து சொல்லி விட்டு, ' வீட்டில் நல்ல நேரத்தில் பூஜை கொண்டாடி ஆயிற்றா?' என்று கேட்டேன்.


பதிவு எதுவும் சொல்லாமல் சிரித்தார்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு 

அவர் சொன்னது தான் 

நான் கொஞ்சமும் எதிர் பாராத ட்விஸ்ட் பதில்.


என்ன சொல்லி இருப்பார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?


இந்த சின்ன பிரேக்கில் இன்று நிகழ்ந்த இன்னொரு 

மகிழ்வான -- சுவாரஸ்யமான சேதியையும் ஷேர் செய்து கொள்கிறேன்.


காலை ஒன்பது மணி இருக்கும். மதுரையில் வசிக்கும் என் நெருங்கிய உறவினரிடம் ( பெயர் வெளிச்சம் எல்லாம் அவருக்கு சுத்தமா ஆகாது) இருந்து ஃபோன் வந்தது.

எடுத்துப் பேசினேன்.


சுற்றி வளைத்து சொதப்பாமல், சாராம்சத்தை மட்டும் சுருக்கமாய் சொல்லி விடுகிறேன்.


தமிழ் நாடு இ பேப்பரின் தீவிர வாசகர் அவர்.

தினசரி காலையில் எழுந்ததும் நமது பேப்பரைப் படித்து விட்டுத் தான் மறு வேலை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


சுய தம்பட்டம் என்று யாரும் தயவு செய்து தப்பர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டாம்.

அவர் சொன்னதைத் தான் அப்படியே தரப் போகிறேன்.


" தமிழ் நாடு இ பேப்பரில் வெளி யாகும் உங்கள் கடிதத்தையும் கோவை வாசகர் திரு.சிவசங்கர்

கடிதத்தையும் தவறாமல் வாசித்து வருகிறேன்.


தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்திற்கு நீங்கள் இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு கொடுத்து வரும் ஆதரவு என்னைப் புல்லரிக்க செய்கிறது.


ஆரம்பத்தில் ஆசிரியர் குழுவினரை ரெண்டு பேரும் சேர்ந்து ஐஸ் வைக்கிறீங்களோ என்று தான் அவசரப் பட்டு தவறாக புரிந்தேன். போகப் போகத் தான் உங்க இரண்டு பேரின் ஆத்மார்ந்த உணர்வு எனக்குப் புரிந்தது.

உங்கள் எழுத்தில் இருந்த சமூக நல சிந்தனை மிகவும் சிறப்பானது.


உங்க வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக இரண்டு பேர் 

சந்தா பணத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... எனக்கு ஒன்று... சென்னையில் இருக்கும் என் மகளுக்கு இன்னொன்று... இரண்டு முகவரியையும்

பணத்தோடு சேர்த்து இப்போதே அனுப்பி வைக்கிறேன்..

 இத்தோடு முடிந்தது என்று எண்ணி விடாதீர்கள்... எனக்கு தெரிந்தவர்களிடம் 

அருள் தரும் தெய்வம் பற்றி எடுத்துரைத்து 

அவர்களையும் சந்தாதாரர் ஆக்கி விடுகிறேன்..." என்று

உயர்ந்த உள்ளத்தோடு

உள்ளன்போடு பேசினார். உடனே இரண்டு பேர்களின் சந்தா தொகையையும் 

'ஜி பே' யில் அனுப்பி வைத்தார்.

உடனே நான் தெய்வம் இதழுக்கு அனுப்பி வைத்தேன்.


அருள் தரும் தெய்வம் இதழின் பெருமை நாளுக்கு நாள் சீராய் வளர்ந்தோங்கி வருவது, சந்தோஷம் அளிக்கிறது.


இப்போது மீண்டும் சரஸ்வதி பூஜை மேட்டருக்கு வருவோம்.


அந்த நண்பர் என்ன சொன்னார் என்று உங்களால் ஊகிக்க முடிந்ததா...இதோ சொல்லி விடுகிறேன்....


" நானே சரஸ்வதி தேவியின் அவதாரம் தானே...

எனக்கு நானே எப்படி பூஜை செய்து கொள்வது...?"


அவரின் பதிலில் தெறித்த தன்னம்பிக்கை என்னை அசர வைத்து விட்டது.


தன்னம்பிக்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.


இந்த அளவு தன்னம்பிக்கையில் 

வாழ்வின் சகல அம்சங்களிலும் நம் வாசக சொந்தங்கள் அனைவரும் மகா வெற்றி பெற்று ‌ஜொலித்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் அனைத்து வெளியீடுகளும் அபார வெற்றி பெற்று மேன்மேலும் வளர்ந்தோங்கிட சரஸ்வதி பூஜை தினத் திருநாள் வாழ்த்துக்கள் கூறி 

வணங்குகிறேன்.


பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%