
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புத்துயிர் இரத்ததானக்கழகம், மக்கள்நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை, மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில் 172வது இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புத்துயிர் இரத்ததானக்கழக செயலாளர் க.தமிழரசன் தலைமை வகித்தார், மக்கள் நலம் அறக்கட்டளை தலைவர் மாரிமுத்துக்குமார் முன்னிலை வகித்தார், முகாமில் பங்கேற்ற 40 பேருக்கு கண்விழி பரிசோதகர் சங்கரி கண் பரிசோதனை செய்தார், 16 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகி நல்லையா, நடராஜபுரம் பொதுமக்கள் நலவாழ்வு இயக்கத் தலைவர் செண்பகம், ஆவல்நத்தம் லட்சுமணன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், INTUC ராஜசேகரன், துரைராஜ், மகேந்திரன், சங்கர் ,மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், மருத்துவமனை ஊழியர்கள் தங்கமணி, பெரியகருப்பன், முகேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?