கோவில்பட்டியில் மண்டல அளவிலான ஹாக்கி இறுதிப்போட்டி

கோவில்பட்டியில் மண்டல அளவிலான ஹாக்கி இறுதிப்போட்டி



மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்தார்.


தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் பள்ளி அணிகளுக்கான லீக் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது.;


தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் மண்டல அளவிலான போட்டியில் நெல்லை மாணவர் விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றது.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் என்ற பெயரில் மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மண்டல அளவிலான ஹாக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மைதானம் மற்றும் வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஹாக்கி மைதானங்களில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி, தென்காசி,சிவகங்கை மாவட்ட அணி மற்றும் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி கலந்து கொண்டன.

இதன் இறுதிப் போட்டியை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்தார். இதில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி (5 - 0) என்ற கோல் கணக்கில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி முதலிடம் பெற்றது. இதன் மூலம் முதலிடம் பெற்ற அணி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் பெற்ற அணி மற்றும் 2,3,4வது இடங்களை பிடித்த அணிகளுக்கும் பரிசு கோப்பைகளை வழங்கினார்.

துவக்க விழாவில் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி உறுப்பினர்கள் 

சுரேஷ்குமார்,முருகன், கிருஷ்ணமூர்த்தி, மனோஜ்குமார், தனசேகரன், மாயாண்டி, அன்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக


கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%