கோவில்பட்டி ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்

கோவில்பட்டி ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்


நவராத்திரி முதல் நாள்: கொலுவுடன் கோலாகலமாக வழிபாடு துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


நவராத்திரி விழா :


கோவில்பட்டி ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதை ஒட்டி கோவிலில் சிவன், பார்வதி விநாயகர், முருகர் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் மற்றும் மங்கலகரமான நிகழ்வுகளை விளக்கும் வகையிலான பொம்மைகளுடன் கொலு அமைக்கப்பட்டது. பின்னர் துர்க்கை அம்மன் கோலத்தில், மாகேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் அம்மன் காட்சி கொடுத்தார். இரவு 7 மணியளவில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் ஆயுள், செல்வ விருத்தி ஏற்பட மல்லிகை மற்றும் வில்வம் பூக்களை பூஜைக்கு கொடுத்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.


ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக


கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%