என்றென்றும் புன்னகை

என்றென்றும் புன்னகை


பிரிவுகள் நிரந்தரமில்லை.


அது ஒரு இளைப்பாறுதல்,

மனமாறுதலுக்காக இயற்கை தரும் இடைவெளி.


மன முதிர்ச்சிக்கு ஒரு பயிற்சி,

இதயம் ஓய்வு பெறும் நேரம்.


வேண்டாதவை மெதுவாக விலகும் தருணம்.

எதுவுமே நிரந்தரமில்லா உலகில்,

பிரிவு மட்டும் நிரந்தரமா?


பிரிவு அமைதியை கொடுக்கும்,

சஞ்சலத்தை போக்கும்.


அதில் சில மாறுதல்கள் மனதில் பூக்கும்,

ஆசைகள் அர்த்தமற்றவை என்பதை உணர்த்தும்.


சரி – தவறு எது என்பதை விளக்கி,

“இது அவசியம், இது அனாவசியம்” எனக் காட்டிவிடும்.


மனதை பக்குவப்படுத்தி

புதிய பாதைக்கு வழிநடத்தும்.


பிரிவுக்குப் பின் எல்லாம் அழகாகும்,

சிலரது பிரிவுகள் வாழ்க்கையை அழகாக்கும்.


பிரிவை பேசிப்பேசி விலக வேண்டாம்; புன்னகையோடு

பிரிவை நேசித்து, அழகாக வாழ்ந்து தொடர்வோம்.


-ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%