
கோவை, அக். 17-
மருத்துவ சேவையில் சிறந்து விளங்கும் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் சார்பில்,
‘கோல்டன் டாக்டர்’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருது தற்போது கோவையைச் சேர்ந்த நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் பாலமுருகனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவரக உள்ளார்.
கோவையில் நடந்த விழாவில் பாலமுருகனுக்கு இந்த விருதை, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை தலைவர் செங்குட்டுவன், செயலாளர் கார்த்திக் பிரபு மற்றும் இந்திய மருத்துவ கழக மருத்துவமனைகளின் தலைவர் அபுல்ஹசன் ஆகியோர் வழங்கினர்.
கோல்டன் டாக்டர் விருது பெற்ற பாலமுருகன், கோவை இந்திய மருத்துவ சங்கத்தின் இணைச் செயலாளராக பணியாற்றிவருகிறார். 1000-க்கும் மேற்பட்ட சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். மேலும், இந்திய மருத்துவ சங்க மாநில சர்க்கரை நோய் விழிப்புணர்வு கமிட்டி தலைவராகவும் பதவி வகிக்கிறார். சமீபத்தில் நடந்த சர்க்கரை நோய் குறித்த ஆய்வுக் கருத்தரங்கில் மருத்துவர் பாலமுருகன் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?