சட்டசபை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

சட்டசபை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

சென்னை, செப். 18–


2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார்.மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் இன்று முதல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது.


இதைத் தொடர்ந்து இன்று காலையில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்? என கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மாலையில் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை கோவை, மாலை மதுரை, நாளை மறுதினம் காலை நெல்லை, மாலை திருச்சி, 21-ந் தேதி காலையில் விழுப்புரம், மாலையில் சேலம் மற்றும் புதுச்சேரி மண்டலங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. சந்திக்கிறார்.


அப்போது ‘மக்கள் நீதி மய்யத்துக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி இருக்கிறது?, வர உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட எத்தனை தொகுதிகளை கேட்கலாம்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்க உள்ளார். இதன் அடிப்படையில் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%