சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்

சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்



சென்னை: ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது.


இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு - தெலங்கானா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணி சார்பில் 13-வது நிமிடத்தில் சவுவிக் ஹால்டரும், 45+1-வது நிமிடத்தில் அபிட்நேகோவும் கோல் அடித்து அசத்தினர்.


90 நிமிடங்களின் முடிவில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 11-வது நிமிடத்தில் தமிழ்நாடு அணியின் ஜெர்மையா சுயகோல் அடித்தார். எனினும் அதன் பின்னர் தமிழ்நாடு அணி கோல் வாங்காமல் பார்த்துக் கொண்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%