பெலெம், நவ. 12 - பிரேசிலின் பெலெம் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் 30 ஆவது காலநிலை மாநாடு நவம்பர் 10 அன்று துவங்கி நடந்து வருகிறது. இம்மாநாடு நவம்பர் 21 வரை நடைபெறும். ஐ.நா அவை காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. கட்டமைப்பு ஒப்பந்தம் அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளை உள்ளடக்கிய மாநாட்டை நடத்தி வருகிறது. 1992-ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு ஒப்பந்தம், (UNFCCC) ரியோ மாநாட்டில் (Rio Summit) ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியா உட்பட 198 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை உலகளவில் எப்படிப் கட்டுப்படுத்துவது என்பதற்கான ஒரு கட்டமைப்பாக இந்த மாநாடு திகழ்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மாநாடு 1995 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்றது. தற்போது 30-ஆவது மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் உலக நாடுகளின் தலைவர்கள், அரசுப் பிரதிநி+திகள், விஞ்ஞானிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். பூமியின் வெப்பநிலையை தொழிற் புரட்சிக்கு முன்பு இருந்த அளவைவிட 1.5 டிகிரி செல்சியஸ்-க்கு கீழே வைத்திருப்ப தும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கை களின் முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்வதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக இம்மாநாட்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் கட்டுப்படுத்த சர்வதேச மற்றும் தேசிய அளவில் என் னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று விவாதிக்கப்படும். அதேபோல காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், மக்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள உதவும் வகையிலான முன்னெச்சரிக்கை அமைப்புகளை உரு வாக்குவது குறித்தும் பேசப்படும். வளிமண்டலத்தில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்ப தற்காக காடுகளை உருவாக்குவது, புதை படிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங் களை அதிகரிப்பது போன்ற திட்டங்களும் விவாதிக்கப்படும். ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக உள்ளது. மேலும் சமீப மாதAங்களில் பலமான புயல்கள் வீசி பயங்கர சேதத்தை உரு வாக்கியுள்ளது. இந்த புயல்கள் இயல்பை விட அதிசக்தி வாய்ந்த புயல்களாக மாறுவதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.