சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா ஓய்வு
Jan 04 2026
14
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டர் உஸ்மான் கவாஜா, ஆஷஸ் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணி களுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி (ஆஸ்திரேலியா) கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியுடன் கவாஜா ஓய்வு பெற உள்ளார். இதுகுறித்து பேசிய கவாஜா,”சிட்னி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். எந்தவொரு தொழிலும் ஒரு தனிப்பட்ட நபருக்கு மட்டும் சொந்தமானதல்ல. வெளிப்படையாக கூற வேண்டும் எனில் நான் இந்த இடத்திற்கு வர, எனக்குப் பலரின் உதவி கிடைத்தது. இதற்காக முதலில் நான் எனது பெற்றோர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்” என அவர் கூறினார். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய முதல் இஸ்லாமிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதன்படி, 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 87 டெஸ்ட் போட்டி களில் 16 சதங்கள், 28 அரைசதங்களுடன் 6206 ரன்கள் குவித்துள்ளார். இதுதவிர, அவர் 40 ஒருநாள் (1,554 ரன்கள்) போட்டிகளிலும், 9 டி-20 (241 ரன்கள்) போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?