சளி, வறட்டு இருமலால் அவதியா..? நிவாரணம் அளிக்கும் அதிமதுர மிளகுப்பால்

சளி, வறட்டு இருமலால் அவதியா..? நிவாரணம் அளிக்கும் அதிமதுர மிளகுப்பால்


 

உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்கள் அதிமதுர மிளகுப்பால் அருந்தினால் உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பால் பருகலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் தூள் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.


வறட்டு இருமல், சளி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.


அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.


தூக்க குறைபாடும்.. உடல் பருமனும்..

 

எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும், உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றினாலும் சரியாக தூங்கவில்லை என்றால் உடல் எடை குறையாது.

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தும் கூட உடல் எடை குறையாமல் உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதற்கு தூக்கமின்மையும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஆம்! இரவில் சரியாக தூங்காமல் தவிப்பதோ அல்லது 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குவதோ நல்லதல்ல.


அந்த மோசமான தூக்கம் உடலில் கொழுப்பு எரிப்பு செயல்முறையை மெதுவாக்கும். பசி ஹார்மோனை தூண்டி பசியை அதிகரிக்க செய்யும். வளர்சிதை மாற்றத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் கொழுப்பு சேர அனுமதித்துவிடும். காலப்போக்கில் உடல் எடை அதிகரிக்க வழிவகை செய்துவிடும்.


எவ்வளவுதான் கடுமையான உடற்பயிற்சி செய்தாலும், உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்றினாலும் சரியாக தூங்கவில்லை என்றால் உடல் எடை குறையாது. உடல் எடை அதிகரிப்பதற்குத்தான் வழிவகுக்கும்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%