சிங்காரப்பேட்டை, புளியனூர் கடப்பாறை அணைக்கட்டுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்: கலெக்டர் தினேஷ்குமார்
Nov 24 2025
12
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள், பிரச்சனைகள் உள்ளிட்டவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
முன்னதாக கடந்த மாதம் 17 அன்று நடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 160 மனுக்களில் 147 மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டிருந்தது. நவம்பர் மாத கூட்டத்தில் 204 மனுக்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டன. அவற்றைத் தீர்க்க தொடர்புடைய துறைகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் வெட்டி வேர் நடவு பற்றி விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கவும், தனியார் கடைகளில் யூரியா உரம் விற்பனையை கண்காணிக்க குழுவை அமைத்து கள ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. சிங்காரப்பேட்டை பகுதியின் 50 ஆண்டுகால கோரிக்கையாக இருந்த ஊத்தங்கரை வட்டம், சிங்காரப்பேட்டை, புளியனூர் கடப்பாறை அணைக்கட்டுகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப் போவதாக கலெக்டர் தெரிவித்தார்.
நில ஆக்கிரமிப்பு, மின்சார இணைப்பு, நீர்நிலை பராமரிப்பு, வங்கி கடன், பேருந்து வசதி, பாதை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஏரி தூர்வாரல், கால்நடை மருத்துவ வசதிகள் போன்ற பொதுப்பிரச்சனைகளும் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?