நீலகிரியில் மருத்துவ காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நவம்பர் 28 கடைசிநாள்
Nov 24 2025
13
நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவ மனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள லேபரட்டரி டெக்னீசியன் (ஐசிடிசி), பார்மசிஸ்ட், ட்ரிபல் கவுன்சி லர் பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 28 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 38, ஜெயில் ஹில் ரோடு, சிடி ஸ்கேன் (அருகில்) ஊட்டி -643 001, தொலைபேசிஎண் 0423-2449250 என்ற முகவரிக்கு உரிய விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
இந்த பதவிக்குரிய தகவல்கள் மற்றும் விண்ணப்பபடிவம் நீலகிரி மாவட்டத கவல் மையத்தில் ((nilgiris.nic.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?