சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய கஞ்சா வியாபாரியை சுட்டுப் பிடித்த போலீஸார்

சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய கஞ்சா வியாபாரியை சுட்டுப் பிடித்த போலீஸார்



கடலூர்: கடலூர் மாவட்​டம் சிதம்​பரம் அண்​ணா​மலை நகர் போலீ​ஸார் நேற்று முன்​தினம் வல்​லம் ​படுகை பகு​தி​யைச் சேர்ந்த நவீன் (25), கோவிந்​த​சாமி நகர் கௌதம் (25), வல்​லத்​துரை அருள் என்​கிற ஜெயக்​கு​மார் (30) ஆகியோரை உசுப்​பூர் ரயில்வே கேட் பகு​தி​யில், ஒரு கிலோ கஞ்​சாவுடன் பிடித்​தனர்.


அப்​போது, நவீன் கத்​தி​யைக் காட்டி மிரட்​டி, அங்​கிருந்து தப்பிஓடி​விட்​டார். மற்ற இரு​வரும் கைது செய்​யப்​பட்​டனர். தொடர்ந்​து, தலைமறை​வாக இருந்த நவீன் கைது செய்​யப்​பட்​டார்.


இந்​நிலை​யில் நேற்று அதி​காலை காவல் ஆய்​வாளர் அம்​பேத்​கர் தலை​மையி​லான போலீ​ஸார் நவீனை அழைத்​துக்​கொண்​டு, அவர் மறைத்து வைத்​திருந்த கஞ்சா பொட்​டலங்​கள் மற்​றும் ஆயுதங்​களைப் பறி​முதல் செய்​வதற்​காக மாரியப்பா நகர் பகு​திக்கு அழைத்​துச் சென்​றனர்.


அப்​போது, நவீன் திடீரென தான் மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால் காவலர் ஐயப்​பனை வெட்​டி​னார். இதையடுத்து ஆய்​வாளர் அம்​பேத்​கர் துப்​பாக்​கி​யால் நவீனின் காலில் சுட்​டுப் பிடித்​தார். பின்​னர், நவீனும், காயமடைந்த காவலர் ஐயப்​பனும் சிதம்​பரம் மருத்​து​வக் கல்​லூரி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். கடலூர் எஸ்​.பி. ஜெயக்​கு​மார், துப்​பாக்கி சூடு நடை​பெற்றபகு​தி​யில் ஆய்வு மேற்​கொண்​டதுடன், மருத்​து​வ​மனை​யில்சிகிச்சை பெற்று வரும் காவலர் ஐயப்​பனை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%