சிதலமடைந்த பாளையக்காரர் சிலைகளை பராமரிக்க வலியுறுத்தல்

சிதலமடைந்த பாளையக்காரர் சிலைகளை பராமரிக்க வலியுறுத்தல்



உடுமலை, நவ.2- உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் இருக்கும் பாளையக்கார்க ளின் சிலைகள் மற்றும் பழமையான கல்திட்டைகளை பராமரித்து, பாது காக்க வேண்டும் என பொதுமக்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக்குப் பிறகு நிலப்பகுதிகள் பாளையங்களா கப் பிரிக்கப்பட்டு, அவற்றை மேற் பார்வை செய்ய பாளையக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். 18 ஆம் நூற் றாண்டு வரை பாளையக்காரர்களின் ஆட்சி இந்த மண்ணில் இருந்துள்ளது. இதன்பின் அவர்களின் நிலப்பகுதிகள் ஜமீன்தார்களாகவும், நிலக்கிழார்களா கவும் மாற்றப்பட்டது. உடுமலை, மடத் துக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பாளையங்கள் நிர் வாகத்தில் இருந்தன. இதில் ஒன்றான உடுமலை வட்டத்திற்குட்பட்ட பள்ள பாளையம் என்ற ஊரின் தெற்குப்பகுதி யில் சிறிய கோவில் உள்ளது. கோவி லுக்கு வெளியே சுவரில் வைக்கப்பட் டிருக்கும் கற்சிலையில் கைகூப்பி நின்ற நிலையில் உள்ள தம்பதியினர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆடை அணிகலன் மற்றும் சிகை அலங் காரத்தை வைத்துப் பார்க்குப்போது, பாளையத்தை ஆட்சி செய்தவர்களா கத் தோன்றுகிறது. பள்ளபாளையத்தி லிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் தளி பாளையம் இருந்திருக்கிறது. இச்சிலை தளி எத்தலப்ப மன்னரின் பாளையத்தை சார்ந்தவர்களாகவோ அல்லது இதே பகுதியைச் சேர்ந்த பாளையக்காரராக இருக்க வாய்ப்புள் ளது. சிற்ப அமைப்பை நோக்கும்போது குறைந்தபட்சம் 200 ஆண்டுகள் பழமை யானதாக இருக்கலாம். இதுபோன்ற சிதலமடைந்த, தனிச்சிற்பங்களை பாது காக்க தமிழக தொல்லியல் துறை ஆவண செய்ய வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%