
'சூரியன் 'உதிக்க ... 'தாமரை ' மலர ....
'ஏர்கலப்பை 'யுடன் புறப்படும் 'விவசாயி '
'சுத்தியல் அருவாளுடன் ' பணிக்கு புறப்படும் தொழிலாளர்கள் ...
'கை "யில் ' முரசு ' ஏந்தி செல்லும் வாத்தியக்காரர்கள்...
எல்லோரும் 'பம்பரமாய் ' சுழன்று கொண்டிருக்க ...
'மாம்பழம் ' விற்க தந்தையுடன் ' சைக்கிளில் ' சென்று கொண்டிருந்த சிறுவன் கேட்டான்...
'அப்பா இன்னைக்கு என்ன விசேஷம் !'
"இன்றைக்கு தான் ஐந்து வருடத்திற்கு ஒரு நாள் நடக்கும் தேர்தல்..நீயும் 18 வயதான கண்டிப்பா ஓட்டு போடணும் புரியுதா... !"
அப்பா சொல்ல...
சரி என்று சிறு 'யானை ' போல் தலையாட்டினான் அச்சிறுவன்.
-------------------------
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?