அலையில் மனம்

அலையில் மனம்



   " அகத்தின் மன

      அலைகள் ஓய்வதில்லை

      கடலைத் தாண்டி

      எழும் அலைகள் ..."


      சில சமயம்

      சந்தேக அலைகள்

      பல நேரம்

      போராட்ட அலைகள் ..."


       ஒரு நாள் மிக

       சந்தோஷமான அலை

       மறுநாள்

       கடுமையான 

       துயர அலை ..."


       சில நாள்

       காதல் அலை

       சில நாள்

       கண்ணீர் அலை ..."


        சமன்பாடு

        தெரியாத புரியாத

        அலை தான்

        நிரந்தரம் ..."


        உழண்டு புரண்டு

        அலையை மீறி

        தலையை வெளியில்

        காட்டும் நம்பிக்கை ..."


        வீடும் அலுவலகமும்

        நித்தமும் தந்திடும்

        புரட்சி அலை ..."


        லைஃப் ஜாக்கெட்

        என்கிற குடும்பம்

        அலையின் அதிகாரத்தை

       அடக்கிவிடுகிறது ..."


        அலையும் அலை சார்ந்த

        மனமும் அமைதியாகிறது

        குழந்தைகளின்

         அன்பு குறும்பில் ..."


         - சீர்காழி. ஆர். சீதாராமன்.

           9842371679 .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%