சின்னப்பாலம் பள்ளியில் உலக உணவு தினம்

சின்னப்பாலம் பள்ளியில் உலக உணவு தினம்



பாம்பன் சின்னப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக உணவு தினம் தலைமையாசிரியர் செல்லம்மாள் தலைமையில் கொண்டாடப்பட்டது.


ஆசிரியர் ஜெ.ஜே.லியோன் தனது உரையில், உலக உணவு தினம் என்பது 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நிறுவப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது.


பசியை எதிர்த்துப் போராடுவதற்கும், மோதல் பகுதிகளில் அமைதிக்கு பங்களிப்பதற்கும், போர் மற்றும் மோதலுக்கு ஆயுதமாக பசியைப் பயன்படுத்துவதைத் தடுப்பதில் முன்னணிப் பங்காற்றுவதற்காக உலக உணவு திட்டம், 2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றது என்பதை விளக்கினார்.


ஆசிரியர் சந்திரமதி வழிகாட்டலில், மாணவர்கள் பழக்கலவை செய்தனர். பழக்கலவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


மாணவர்களை ஆசிரியர்கள் நிஷா, மிக்கேல் ராணி, ஞானசெளந்தரி, லாரன்ஸ் எமல்டா, நிவேதா, அமுதவள்ளி, நான்சி, பிரிஸ்கிலா போன்றோர் பாராட்டினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%