
தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி தமிழ்த்துறை, குணங்குடியார் தமிழ்ப் பேரவை சார்பில் உரையரங்கம் நடைபெற்றது. இவ்வுரையரங்கத்திற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்கள் தலைமை வகித்தார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி முன்னிலை வகித்தார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சு.சி. பொன்முடி ’காந்தி - நேற்று இன்று நாளை’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக, பேராசிரியர் முனைவர் கே. பழனிவேல் வரவேற்றார். முடிவில் மாணவி ஆயிஷா நன்றி தெரிவித்தார். இவ்வுரையரங்கத்திற்கான ஏற்பாடுகளைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் மற்றும் முனைவர் மு. அப்துல்காதர் ஆகியோர் செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?