
சீர்காழி, செப் , 30 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமை ஆதீன அருளாட்சிக்குட்பட்ட அருள்மிகு சட்டநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருநிலை நாயகி அம்மன் சன்னதியில் நவராத்திரி இசை பெரு விழா கொண்டாடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் நாதஸ்வரம்,கர்நாடக ஆகிய இசைப்பாட்டுகள் வயலின், மிருதங்கம், முகர்சிங், கஞ்சிரா, வீணை, கடம் ஆகிய பாரம்பரியமிக்க இசைக்கருவிகளுடன் பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த வித்வான்கள் வாசிக்க தினந்தோறும் பல்வேறு கர்நாடக இசை பாடல்கள் பாடப்பட்டு நவராத்திரி விழா நிகழ்ச்சிகள் தினந்தோறும் மாலை 5.30 மணி முதல் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நேற்றைய நிகழ்ச்சிக்கு நவராத்திரி கமிட்டி தலைவர் பரஞ்சோதி மு. முத்துக்கருப்பன் தலைமை வகிக்க, செயலாளர் ந. சட்டையப்பன், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி சென்னை முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினராக சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சென்னையில் இருந்து வருகை புரிந்து கலந்து கொண்ட அனைத்து கர்நாடக இசை கலைஞர்களை பொன்னாடை அணிவித்து, வாழ்த்துரை வழங்கினார். மேலும் நிகழ்வில் நவராத்திரி கமிட்டி துணைத் தலைவர் பி. சந்தானகிருஷ்ணன், துணை செயலர் பி. மணிகண்டன் பொருளாளர்,ஆர். சத்ருகன் குமார் ஆகியோர்களுடன் ஏராளமான பக்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக திருஞானசம்பந்தர் இசை பள்ளி பேராசிரியர் ந.சட்டையப்பன் நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?