சீர்காழியில் பசுமை சேவை சங்கம் சார்பில் 1 லட்சம் பனை விதை நடும் பணி துவக்க விழா

சீர்காழியில் பசுமை சேவை சங்கம் சார்பில்   1 லட்சம் பனை விதை நடும் பணி துவக்க விழா



சீர்காழி , அக் , 07 - 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பசுமை சேவை சங்கம் சார்பில் 1 லட்சம் பனை விதை நடும் பணி துவக்க விழா சீர்காழி உப்பனாற்று கரை அருகே நடைப்பெற்றது. 

விழாவிற்கு பசுமை சேவை சங்க தலைவர் பொறியாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர் மன்ற உறுப்பினர் எஸ்.வேல்முருகன் முன்னிலை வகித்தார். சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் , மயிலாடுதுறை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஜெக.வீரபாண்டியன் ஆகியோர் ஒரு லட்சம் பனன விதை நடும் பணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். சீர்காழி தாலுக்கா வியாபாரிகள் சங்க பொது செயலாளர் கே.துரைராஜ் , மாநில ஊழல் தடுப்பு இயக்க தலைவர் ஜெக.சண்முகம் மற்றும் கோடங்குடி சங்கர் , பேராசிரியர் எஸ்.ஜெயராமன் , சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் , சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் , இராம. சிவசங்கர் , சுற்று சூழல் பாதுகாப்பு இயக்கம் மதிவாணன் , சமூக ஆர்வலர் தில்லை நடராஜன் , தமிழக வாழ்வுரிமை கட்சியின் சீர்காழி தொகுதி செயலாளர் ரமேஷ் , பசுமை சேவை சங்க நகர செயலாளர் சம்பத் கணேஷ் , பொருளாளர் சத்தியநாராயணன், மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப் புற கலைஞர்கள் நல சங்க மாவட்ட செயலாளர் கிங்பைசல் ஆகியோர்  

வாழ்த்து தெரிவித்து விழாவில் கலந்து கொண்டார்கள். பசுமை சேவை சங்கத்தின் பொது செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%