திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழருக்கு புதிய வீடுகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது மற்றும் மறுவாழ்த்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ருக்கு புதிய வீடுகளை காணொளி க் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (06.10.2025)
சென்னை தலைமைச் செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம்சிப்பந்தி ஊராட்சியில் சொரகொளத்தூர் மற்றும் தென்பள்ளிப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு புதியதாக கட்டப்பட்டுள்ள 252 வீடுகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு.கு.பிச்சாண்டி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என். அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.சு.தி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இலங்கை தமிழர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர்களுக்கான மறுவாழ்வு, குடியிருப்பு மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலாபாக்கம் வட்டாரத்தைச் சேர்ந்த தென்பள்ளிப்பட்டு மற்றும் திருவண்ணாமலை வட்டம் சொரகொளத்தூர் பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அரசிடம் தங்களுக்கு புதிய குடியிருப்புகள் அமைத்துத் தருமாறு கோரிக்கை
விடுத்ததன் பேரில், மாவட்ட நிர்வாகத்தால் அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, அரசு ஆணை எண்:331 பொது (மறுவாழ்வு-2(1))த் துறை நாள் 30.05.2023 இல், சொரகொளத்தூர் முகாமிற்கு மாற்றாக ரூ 530.15 இலட்சம் மதிப்பீட்டில் 92 புதிய குடியிருப்புகளும், தென்பள்ளிப்பட்டு முகாமில் வசிப்பவர்களுக்கு ரூ 922.00 இலட்சம் மதிப்பீட்டில் 160 புதிய குடியிருப்புகள் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், நாயுடுமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அகரம்சிப்பந்தி பகுதியில் மொத்தம் 252 புதிய குடியிருப்புகள் அமைத்து தர, தமிழ்நாடு அரசால் இசைவு அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இக்குடியிருப்புகளுக்கு உரிய தெருவிளக்குகள் வசதியும், புதிய மேநீர் தேக்கதொட்டி அமைத்து குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இது தவிர, மொத்தம் ரூ 299.45 லட்சம் மதிப்பீட்டில், இரண்டு 30000லி கொள்ளளவு கொண்ட இரண்டு மேநீர் தேக்கதொட்டிகளும், ஒரு திறந்தவெளி கிணறு குடிநீர் ஆதாரமாகவும், பக்ககால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை தெருக்களும் அமைப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கான புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார், அதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு திறந்துவைத்து குடியிருப்புகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.மணி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திரு.ராஜ்குமார் ,தனி வட்டாட்சியர் (இலங்கை தமிழர் நலன்) திரு.ரவி, திருவண்ணாமலை வட்டாட்சியர், கலசபாக்கம் வட்டாட்சியர், துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.