கனவு காண்

கனவு காண்



" தமிழ் என்னும் பேச்சு அதுவே

உயிர் மூச்சு தாய்மொழியே வாசம்

மற்றவையெல்லாம் வேஷம் துடிப்பு

நாடித்துடிப்பு தமிழ்மொழியே பிடிப்பு 


" வீர விளையாட்டும் மண்வாசனையும்

உச்சம் தொட நெறி வாழ்க்கை மலர

நாணயம் நேர்மை தூய்மை தழைத்திட

கனவு காண் இளைய சமுதாயமே "


" முதியோர் இல்லம் இல்லா தேசம் மாற்றுத்திறனாளி நேசம் அனாதை பாதுகாப்பு பெண்கள் நாட்டின் கண்கள் என்று

எழுச்சி கனவு காண் எதிர்காலமே " 


" விரல் நுனியில் உலகம் கைபேசியில்

என்றாலும் உழைப்பை இயல்பை உறுதியை

நகைச்சுவையை நம்பிக்கையை

வளர்க்க கனவு காண் தலைமுறையே "


" பழமொழி பண்பாடு நாகரிகம் மேம்பட

விருந்தோம்பல் மனிதநேயம் நட்பு ஈர்ப்பு 

மென்மை காதல் முதுமை அனுபவம்

அசை போட கனவு காண் இளைஞர்களே "


" உழவும் பசுமையும் உயர்ந்திட அழகு

நாடக கிராமிய கலை சிறந்திட

மண்வாசனையை நுகர்ந்திட இன்றே

கனவு காண் புதுமை விரும்பிகளே''


" நீர் நிலைகளை பாதுகாத்து உடன்

மாசில்லா காற்றை சுவாசிக்க  

உணவே மருந்து என ஆயுள் கூட்டிட உழைப்பு

மூல விதையை விதைக்க கனவு காண் "


" வீரம் வேகம் விவேகம் வழிகாட்ட

அழுத்தமாக பாதம் பதித்து விடு

கனவு காண் என்று சோம்பி விடாமல்

 முயற்சி பயற்சி எழுச்சியென முற்படு " 


- சீர்காழி .ஆர்.சீதாராமன் .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%