
ஏழை வயிற்றில் பிறந்து விட்டாய் ஏனடா கண்ணா..?
எங்களுக்கு செல்வம் நீயே வாழடா கண்ணா.!
உழைப்பவனின் கண்மணியே யாரடா கண்ணா.. உன்னைப் பெற்ற அன்னை தந்தை பாரடா கண்ணா.!
நீ வளர்ந்து ஆளாகி உயரணும் கண்ணா.. தாய் மகிழ்ந்து பாராட்டி மகிழணும் கண்ணா..
கல்வி, மனை, செல்வம்.. எல்லாம் சேரணும் கண்ணா.. அது உன் கடும் உழைப்பில் வந்ததாக அமையணும் கண்ணா.!
கஞ்சியிலே உப்பு எங்கள் கண்ணீரே கண்ணா.. நெஞ்சினில உன் நினைவே இருக்கணும் கண்ணா..
பிஞ்சு கரத்தில் சோறு எனக்கு ஊட்டடா கண்ணா.. நீ பெரியவனாய் வளர்ந்து வாழ்ந்து காட்டணும் கண்ணா!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%