
ஜே.சி.பி வாகனங்கள் நிற்கிறது சாலையோரமாய்!
ஏதேனும் அரசு விழாவா?
இல்லை அரசியல் கட்சி மாநாடா?
சாலை
செப்பனிடுகிறார்களா?
இல்லை ஏதேனும் குழி பறிக்கிறார்களா?
இல்லை மராமத்துப்பணிகளா?
அல்லது சடுதியாய் எழுப்புகிற வானுயர கட்டிடமா?
அப்படியேதும் கேள்விப்படவோ, புலப்படவோ இல்லை
நெற்றி சுருக்கிப்பார்த்த போதும்
விழி படர்விற்குள் தட்டுப்படவும் இல்லை.
எதிர்சாரி அரசு மருத்துவனை நோயுற்றவரையும் இன்னும் பிறரையுமாய்
உள்வாங்கியும் வெளிவிட்டுகொண்டுமாய்!
ஒட்டி ஊர்ந்த சாலையில்
மிதவை கொண்டிருந்த வாகனங்கள்.
காதருகே சப்தமிட்ட கார் ஒலிப்பான்.
சாலை திருப்பத்தில் வேகம் காட்டி கீழ் விழுந்த
இருசக்கர வாகனம்.
பழங்களும்,காய்கறிகளும் வெங்காயமும்,என சூடுபட்டிருந்த
சாலையோர வண்டி வியாபாரம்.
இதனைத்தையும் வேடிக்கை பாரத்தவாறிருந்த வளாகத்து மரத்து அணில்.
சாலை,வாகனங்கள்,
மருத்துவமனை,
நோயுற்றவர்கள்,
வியாபாரிகள்,
பாதசாரிகள்எனபின்னலிட்ட விழுமியங்கள் கடந்து ஜே.சி.பிவாகனங்களைப் பார்க்கிறேன் திரும்பவுமொருமுறையாய்.
சாலையோரம் நின்ற அவைகளை மீண்டுமொருமுறையாய் எடுத்து துடைத்து வைக்கிறார் வியாபாரி!
விமலன்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?