சமநிலை பெற வேண்டும்

சமநிலை பெற வேண்டும்



   " பிறப்புக்கும்

     இறப்பிற்கும்

     நடுவில் 

     பெரும் போராட்டம் ... "


      தூங்குவது இல்லை

      இதயம் உதயமான

      பீரங்கிகள் வலம்

      வரும் எக்காலமும் ....."


      போர் அவசரகால

      நிலை அழுகுரல்

      பசி பஞ்சம்

      பட்டினி ......"


      ஏவுகணைகள்

      தாக்கி தாக்கி

      ஏலத்திற்கு வந்தது

      மனிதம் .... "


       உயிர்கள் பலி

       நாடு நகரம்

       நாசம் அகதிகளாய்

       மக்கள் ..."


        இன்னும் பிற்போக்கு

        சிந்தனை ,காலம்

        மாறினாலும் காட்சிகள்

        மாறவில்லை ..."


         அதிகாரம் காட்டும்

         ஆதிக்கம் அடங்காத

         இரத்தத்தை உறிஞ்சும்

         ஒட்டுண்ணி ... "


       அமைதியை தேடியே

       உலகம் , வெள்ளைக்

       கொடிக்கு உண்டு

       மகத்துவம் .... "


        உலகம் சமநிலை

        பெற வேண்டும்

        அதில் உயர்வு

        தாழ்விலா நிலை

        வேண்டும் ..."


   - சீர்காழி. ஆர். சீதாராமன்.

      9842371679 .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%